திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நடிகர் சூர்யா குடும்பத்தினருடன் சாமி தரிசனம் செய்தார்.
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் விஐபி தரிசனம் மூலம் நடிகர் சூர்யா, மனைவி ஜோதிகா மற்றும் குழந்தைகளுடன் சாமி தரிசனம் செய்தார்.
பின்னர், கோயில் வளாகத்தில் உள்ள ரங்கநாயக்க மண்டபத்தில் அவருக்கு வேத ஆசீர்வாதங்கள் முழங்க தீர்த்தம் மற்றும் லட்டு பிரசாதங்கள் வழங்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து கோயிலுக்கு வெளியே வந்த நடிகர் சூர்யா மற்றும் நடிகை ஜோதிகாவுடன் பக்தர்கள் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.