விஜய் தேவரகொண்டா நடித்த கிங்டம் படம் மூன்று நாட்களில் 67 கோடி ரூபாயை வசூலித்துள்ளது.
தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகரான விஜய் தேவரகொண்டா, கவுதம் தின்னனுரி இயக்கத்தில் கிங்டம் என்ற படத்தில் நடித்துள்ளார்.
இப்படத்தில் பாக்யஸ்ரீ போர்ஸ் கதாநாயகியாக நடித்துள்ளார். அனிருத் இசையமைத்துள்ள இந்த திரைப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.
இந்நிலையில், உலகளவில் 3 நாட்களில் 67 கோடி ரூபாயை கிங்டம் படம் வசூலித்துள்ளதாகப் படக்குழு அறிவித்துள்ளது.