கோவை மாவட்டம் பொள்ளாச்சி அடுத்த ஆனைமலை மாசாணி அம்மன் கோயிலில் நடிகர் விமல் சுவாமி தரிசனம் செய்தார்.
புதிய திரைப்படத்திற்கான பூஜையில், நடிகர் விமல், புதிய கதாநாயகி சங்கீதா மற்றும் படக்குழுவினர் உள்ளிட்டோர் கலந்து கொண்டு, சுவாமி தரிசனம் செய்தனர்.
இதனைத் தொடர்ந்து, மாசாணி அம்மன் கோயில் அருகே உள்ள தோட்டத்தில் வடம் திரைப்படத்துக்குப் பூஜை நடைபெற்றது. பின்னர், பக்தர்களுக்கு விமல், கதாநாயகி சங்கீதா உள்ளிட்டோர் அன்னதானம் வழங்கினர்