நிலவு மற்றும் செவ்வாய்க் கிரக பயணங்களுக்காக லடாக்கில் ஆராய்ச்சிக் கூடத்தை இஸ்ரோ அமைத்துள்ளது.
யூனியன் பிரதேசமாக அறிவிக்கப்பட்ட லடாக்கின் சோகர் பள்ளத்தாக்கு, செவ்வாய்க் கிரகத்தின் சூழ்நிலையை ஒத்து உள்ளது.
குறிப்பாக, சுற்றுச்சூழல் ஒரே மாதிரியாக இருப்பதுடன், அதிக புற ஊதா கதிர் வீச்சு, குறைந்த வளிமண்டல அழுத்தம், தீவிர குளிர் ஆகியவை செவ்வாய்க் கிரகத்தின் மேற்பரப்பிற்கு ஒப்பானதாக இந்த பகுதி உள்ளது.
இங்கு, இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ, ஆய்வுக்காக அமைத்துள்ள ஆராய்ச்சிக்கூடத்தை இஸ்ரோ தலைவர் நாராயணன் திறந்து வைத்தார்.
இங்கு விஞ்ஞானிகள் பலர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த கூடம், எதிர்காலத்திற்கான ஒத்திகை என்று அழைக்கப்படுகிறது.