ராஞ்சனா படத்தின் க்ளைமாக்ஸ் ஏஐ மூலம் மாற்றப்பட்டு இருப்பதற்கு நடிகர் தனுஷ் கண்டனம் தெரிவித்துள்ளார்.
2013-ல் ஆனந்த் எல்.ராய் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் இந்தியில் ராஞ்சனா என்ற பெயரிலும், தமிழில் அம்பிகாபதி என்ற பெயரிலும் வெளியான படம் மக்களிடையே வரவேற்பைப் பெற்றது.
திரைப்படம் வெளியாகி 12 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், அண்மையில் படத்தின் கிளைமேக்ஸ் காட்சியை ஏஐ மூலம் மாற்றி ரீரிலீஸ் செய்துள்ளனர்.
அதில் குந்தன் கதாபாத்திரத்தில் நடித்த தனுஷ் கடைசியாக உயிர் பெற்று வருவது போல் காட்சிகள் அமைந்துள்ளது.
இந்த நிலையில், ஏஐ மூலம் மாற்றப்பட்ட கிளைமாக்ஸுடன் ‘ராஞ்சனா’ படம் ரீ-ரிலீஸ் ஆனது தனக்கு மிகுந்த வருத்தம் அளிப்பதாக நடிகர் தனுஷ் தெரிவித்துள்ளார்.
திரைப்படங்களையும், உள்ளடக்கங்களையும் ஏஐ உதவியுடன் மாற்றுவதென்பது கலைக்கும், கலைஞர்களுக்கும் மிகவும் கவலைக்குரிய விஷயம் என்று குறிப்பட்ட தனுஷ்,
எதிர்காலத்தில் இதுபோன்ற செயல்களைத் தடுக்கும் விதமாகக் கடுமையான விதிமுறைகள் அமல்படுத்தப்படும் என்று நம்புவதாகத் தெரிவித்துள்ளார்.