பாகிஸ்தானுக்கு எதிரான 2-வது டி20 போட்டியில், 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றி பெற்றது.
வெஸ்ட் இண்டீஸ் – பாகிஸ்தான் அணிகள் மோதிய 2-வது 20 ஓவர் போட்டி நடைபெற்றது. முதலில் ஆடிய பாகிஸ்தான் 20 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 133 ரன் எடுத்தது.
பின்னர் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் 134 ரன் இலக்கை கடைசி பந்தில் எடுத்தது. அந்த அணி 20 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 135 ரன் எடுத்து 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றி மூலம் 3 போட்டிக் கொண்ட தொடரில் 1க்கு 1 என்ற கணக்கில் இரு அணிகளும் சமநிலையில் உள்ளன.