அதிமுக ஆட்சி அமைந்ததும் விவசாயிகளுக்கு 24 மணி நேரமும் மும்முனை மின்சாரம் வழங்கப்படும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
நெல்லையில் விவசாயிகள் மற்றும் வியாபாரிகளுடன் அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி கலந்துரையாடினார்.
அப்போது விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் சங்கத்தினர் சார்பில் பல்வேறு கோரிக்கைகள் எடுத்துரைக்கப்பட்டன. தொடர்ந்து அவர்களுக்குப் பதிலளித்துப் பேசிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, அதிமுக ஆட்சி அமைந்தவுடன் இயற்கை விவசாயத்திற்கு அனைத்து உதவிகளும் வழங்கப்படும் எனவும், விவசாயிகளுக்கு 24 மணி நேரமும் மும்முனை மின்சாரம் வழங்கப்படும் என்றும் தெரிவித்தார்.
5 ஆண்டுகளில் 2 முறை விவசாயக் கடனை தள்ளுபடி செய்த ஒரே கட்சி அதிமுகதான் எனத் தெரிவித்த எடப்பாடி பழனிசாமி, திமுக அரசு கடன் வழங்க ஏதேதோ காரணங்கள் கூறி விவசாயிகளை அலைக்கழித்து வருவதாகக் குற்றம் சாட்டினார்.