கவின் நடித்துள்ள கிஸ் படத்தின் ரிலீஸ் தேதி குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
ட்புன்னா என்னானு தெரியுமா படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுக கவின், ‘லிப்ட்’ , ‘டாடா’ திரைப்படங்கள் மூலம் ரசிகர்களின் வரவேற்பைப் பெற்றார்.
இதற்கிடையில் பிரபல நடன இயக்குனரான சதீஷ் இயக்கும் கிஸ் என்ற படத்தில் கவின் நடித்துள்ளார். அயோத்தி படத்தின் மூலம் பிரபலமான நடிகை பிரீத்தி அஸ்ரானி கவினுக்கு ஜோடியாக நடித்துள்ளார்.
தமிழ், தெலுங்கு , இந்தி உள்ளிட்ட மொழிகளில் வெளியாக உள்ளது. படத்தின் டீசர் மற்றும் பாடல்கள் வெளியாகி வைரலான நிலையில், வருகிற செப்டம்பர் மாதம் 18ந் தேதி வெளியிடப் படக்குழு திட்டமிட்டுள்ளதாகத் தகவல் கிடைத்துள்ளது.