மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கு எதிரான டி20 கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்று பாகிஸ்தான் தொடரையும் கைப்பற்றியது.
பாகிஸ்தான் கிரிக்கெட் அணி மேற்கிந்தியத் தீவுகளுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது.
முதல் போட்டியில் பாகிஸ்தானும், 2வது போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் அணியும் வெற்றி பெற்றுள்ள நிலையில் 3வது போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் பேட்டிங்கை தேர்வு செய்தது.
20 ஓவரில் 4 விக்கெட்டை இழந்த பாகிஸ்தான் 189 ரன்கள் எடுத்தது. 190 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய மேற்கிந்திய தீவுகள் அணி 20 ஓவரில் 6 விக்கெட்டை இழந்து 176 ரன் மட்டுமே எடுத்தது.
இதன் மூலம் 13 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் 2-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றி அசத்தியது.