பீகாரில் அதிவேகமாக வந்த கார் சாலையோரத்தில் இருந்தவர்கள் மீது பயங்கரமாக மோதிய சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது.
ரோஹ்தாஸ் பகுதியில் சாலையோர திட்டில் இருவர் அமர்ந்து பேசி கொண்டிருந்தனர். அப்போது அவர்களை தாண்டி பெண் ஒருவர் நடந்து சென்றபோது எதிர்த்திசையில் அதிவேகமாக வந்த தார் என்ற கார் கட்டுப்பாட்டை இழந்து மூன்று பேர் மீதும் பயங்கரமாக மோதியது.
இந்த விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்த நிலையில் 3 வயது சிறுமி உட்பட இருவர் படுகாயமடைந்தனர். இந்நிலையில் பதைபதைக்க வைக்கும் விபத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது.