இங்கிலாந்திற்கு எதிரான 5வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்றது. முதல் இன்னிங்சில் இந்தியா 224 ரன்களும், இங்கிலாந்து 247 ரன்களும் எடுத்தன.
23 ரன் பின்தங்கியபோது 2வது இன்னிங்சை ஆடிய இந்தியா 396 ரன்களில் ஆல்அவுட்டானது. 374 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் 2வது இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து 4 நாள் ஆட்டம்நேர முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 339 ரன்கள் எடுத்திருந்தது.
35 ரன்கள் மட்டும் தேவை என்ற நிலையில் 5வது நாள் ஆட்டத்தை இன்று தொடங்கிய இங்கிலாந்து அணி இந்திய வீரர்களின் பந்துவீச்சால் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறி கொடுத்து. இறுதியில் இந்திய அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.