கரூர் மாவட்டம் குளித்தலை அருகே ஸ்ரீ மகாலட்சுமி அம்மன் கோயிலில் பக்தர்கள் தலையில் தேங்காய் உடைத்து தங்களுடைய நேர்த்திக்கடனை செலுத்தினர்.
மேட்டு மகாதானபுரத்தில் 400 ஆண்டுகள் பழமையான ஸ்ரீ மகாலட்சுமி கோயிலில் ஆடிப்பெருக்கு விழா வெகுவிமரிசையாக நடைபெற்றது.
அப்போது, அம்மனுக்குச் சிறப்பு அபிஷேக, அலங்காரங்கள் செய்யப்பட்டு, தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
பின்னர், விரதமிருந்து நேர்த்திக்கடன் செலுத்த வந்த நூற்றுக்கணக்கான பக்தர்களின் தலையில் கோயில் பூசாரி தேங்காய் உடைத்தார். இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.