கேரளாவில் சிறுவர் பூங்காவில் நுழைந்த காட்டு யானை ஒன்று ராட்டினத்தைச் சுற்றிவிட்டு விளையாடி வீடியோ வைரலாகி உள்ளது.
கேரளாவில் வனப்பகுதிகளில் இருந்து வெளியேறும் காட்டு யானைகள் அவ்வப்போது குடியிருப்பு பகுதிகளுக்குள் புகுந்து பொதுமக்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது.
இந்நிலையில் வயநாட்டில் உள்ள சிறுவர் பூங்காவில் நுழைந்த காட்டு யானை ஒன்று சிறுவர் விளையாடும் ராட்டினத்தைச் சுற்று விளையாடியது. இந்த காட்சிகள் அங்குப் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவான நிலையில் வைரலாகி உள்ளது.