இந்திய நிலத்தைச் சீனா ஆக்கிரமித்துள்ளது எனும் தனது கருத்து, தானே சொந்தமாகப் புனைந்து கூறியதா என்பதை ராகுல் காந்தி விளக்க வேண்டும் என மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து பேசியவர்,
சீனா ஆக்கிரமிப்பு தொடர்பாக ராகுல் காந்தி கருத்து தெரிவிக்க 3 சாத்தியக் கூறுகள் மட்டுமே உள்ளன என்றும் இந்திய அரசோ, ராணுவமோ ஆதாரங்களை வழங்கினால், அது அதிகாரப்பூர்வ ஆவணமாகக் கருதப்படும் என்று அவர் கூறினார்.
நமது பிரதேசம் சிறப்பாகப் பாதுகாக்கப்படும் தகவலை அரசாங்கம் ஏற்கனவே வழங்கியுள்ளது என்றும் ராகுல் காந்தி ஒரு வேளை சீன அரசிடமிருந்து தகவலைப் பெற்றிருக்க வேண்டும் என்றும் ராகுல் காந்தியின் கருத்துக்கான 3வது
சாத்தியக்கூறு அதனை அவரே சொந்தமாக உருவாக்கியிருக்க வேண்டும் என்று கிரண் ரிஜிஜூ குறிப்பிட்டார்.
சீன ஆக்கிரமிப்பு குறித்த தனது கூற்றுச் சொந்தமாக உருவாக்கியதா என ராகுல் காந்தி சொல்ல வேண்டும் என்று கிரண் ரிஜிஜூ கூறினார்.