கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களுக்கு இன்று அதி கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களில் இன்று அதி கனமழைக்கு வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தென்காசி, தேனியில் இன்று மிகக் கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. திண்டுக்கல், திருப்பூர், ஈரோடு, சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.