தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சிகளின் நாடாளுமன்ற குழுக் கூட்டத்தில், ஆப்ரேஷன் சிந்தூர் மற்றும் ஆப்ரேஷன் மகாதேவ் வெற்றி பெற்றதற்கு, பிரதமர் மோடிக்குப் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் நாடாளுமன்ற குழு கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக வருகை தந்த பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
தொடர்ந்து, ஆப்ரேஷன் சிந்தூர் மற்றும் ஆப்ரேஷன் மகாதேவ் வெற்றி பெற்றதற்காக, பிரதமர் மோடிக்கு மாலை அணிவித்து, பாராட்டு தெரிவிக்கப்பட்டது. அப்போது, பாஜக மற்றும் கூட்டணிக் கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஹர் ஹர் மகாதேவ் என முழக்கம் எழுப்பி, பாராட்டு தெரிவித்தனர்.
இக்கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், பாஜக தேசிய தலைவர் ஜெ.பி. நட்டா மற்றும் தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சி எம்பிக்கள் கலந்து கொண்டனர்.