புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அருகே நடைபெற்ற இரட்டை கொலை வழக்கு தொடர்பாக, தேசிய பட்டியலின ஆணைய தலைவர் கிஷோர் மேக்வானா உயிரிழந்தவர்கள் குடும்பத்தினரைச் சந்தித்து விசாரணை நடத்தினார்.
ஆவுடையார் கோவிலில் கடந்த ஜூலை 24-ம் தேதி பட்டியலின குடும்பத்தைச் சேர்ந்த கண்ணன், கார்த்திக் ஆகிய இரு சகோதரர்கள் வெட்டி படுகொலை செய்யப்பட்டனர்.
இந்த வழக்கில் போலீசார் 8 பேரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இந்நிலையில், கொலை சம்பவம் நடந்த இடத்தை தேசிய பட்டியலின ஆணைய தலைவர் கிஷோர் மேக்வானா ஆய்வு செய்தார்.
தொடர்ந்து உயிரிழந்தவர்களின் குடும்பத்தாரையும் அவர் நேரில் சந்தித்து விசாரணை மேற்கொண்டார். இந்த நிகழ்வின்போது மாவட்ட ஆட்சியர் அருணா, எஸ்.பி அபிஷேக் குப்தா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.