ஜம்மு – காஷ்மீரின் அகல் தேவ்சர் பகுதியில் பாதுகாப்புப் படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகளின் ஊடுருவல் இருப்பதாக ரகசியத் தகவல் கிடைத்ததன் அடிப்படையில் அங்குப் பாதுகாப்புப் பணிகளை போலீசார் மற்றும் பாதுகாப்புப் படையினர் தீவிரப் படுத்தினர்.
அப்போது பாதுகாப்புப் படையினர் நடத்திய தாக்குதலில் பயங்கரவாதி ஒருவர் உயிரிழந்த நிலையில் 5 வது நாளாக அகல் தேவ்சர் பகுதியில் ஆயுதம் ஏந்திய ராணுவத்தினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
















