17 ஆயிரம் கோடி ரூபாய் கடன் மோசடி வழக்கின் விசாரணைக்காக டெல்லியில் உள்ள அமலாக்கத்துறை இயக்குநரக அலுவலகத்தில் தொழிலதிபர் அனில் அம்பானி ஆஜரானார்.
அனில் அம்பானிக்குச் சொந்தமான ராகாஸ் நிறுவனத்திற்கு எஸ் வங்கிக் கடன் வழங்கியதாகக் கூறப்படுகிறது.
கடன் பெற்றதில் மோசடி நடந்ததாகக் கூறப்படும் நிலையில் அவருக்குச் சொந்தமான நிறுவனங்களில் அமலாக்கத்துறையினர் சோதனை மேற்கொண்டனர்.
மேலும் அவர் விசாரணைக்காக ஆஜர் ஆக வேண்டும் என அமலாக்கத்துறை அதிகாரிகள் சம்மன் அனுப்பியிருந்தனர். அதன்படி டெல்லியில் உள்ள அமலாக்கத்துறை இயக்குநரக அலுவலகத்தில் அனில் அம்பானி ஆஜராகினார்.