பாகிஸ்தானைச் சேர்ந்த பிச்சைக்காரர்கள் ஆண்டுக்குப் பல ஆயிரம் கோடி ரூபாய் வருவாய் ஈட்டுவதாக, அதிர்ச்சி மற்றும் ஆச்சரியகரமான தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்த செய்தி தொகுப்பைப் பார்க்கலாம்.
உலகம் முழுவதும் செயற்கை நுண்ணறிவு, டேட்டா சயின்ஸ், ரோபோட்டிக் சயின்ஸ் உள்ளிட்டவை சார்ந்த வேலைகளில் சேர மக்கள் மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றனர். ஆனால், பாகிஸ்தானிலோ நிலைமை தலைகீழாக உள்ளது. அந்நாட்டில் பிச்சை எடுப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும், பிச்சை எடுப்பது முக்கிய தொழிலாக உருவெடுத்து வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
பாகிஸ்தானின் மொத்த மக்கள் தொகை 23 கோடி. இதில் சுமார் 4 கோடி பேர் பிச்சைக்காரர்களாக உள்ளதாகக் கூறப்படுகிறது. அதாவது ஆறில் ஒரு பாகிஸ்தானியர் பிச்சை எடுப்பதைத் தனது பிரதான தொழிலான கொண்டுள்ளனர்.
டான் என்ற தனியார் செய்தி நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், பாகிஸ்தானைச் சேர்ந்த ஒவ்வொரு பிச்சைக்காரரும் தினமும் சராசரியாக 264 ரூபாய் சம்பாதிப்பதாகத் தெரிவித்துள்ளது. அப்படியென்றால் 4 கோடி பிச்சைக்காரர்களும் சேர்ந்து ஒரு வருடத்திற்குப் பல ஆயிரம் கோடி ரூபாய் வரும்.
இப்படி பாகிஸ்தான் நாட்டின் மொத்த மக்கள் தொகையில் ஆறில் ஒரு பங்கு மக்கள் எந்தவித வேலையும் செய்யாமல், மலைக்க வைக்கும் அளவுக்குப் பணம் சம்பாதித்து வருகின்றனர். பாகிஸ்தான் நாட்டின் வளர்ச்சி தொடர்ந்து மந்த நிலையிலேயே இருப்பதற்கு, இத்தனை கோடி மக்கள் இப்படி சோம்பேறிகளாக இருப்பதும் முக்கிய காரணம்.
பாகிஸ்தானில் உள்ள Business and Society Center வெளியிட்ட தகவலின்படி, அந்நாட்டில் உடல்சார் தொழிலாளர்களின் எண்ணிக்கையை விட, பிச்சை எடுப்பவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.
பிச்சை எடுக்கும் தொழிலில் குழந்தைகளும் அதிகளவில் ஈடுபடுத்தப்படுவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தானின் தெருக்களில் சுமார் 12 லட்சம் குழந்தைகள் பிச்சை எடுத்து வருவதாக, ஆசிய மனித உரிமைகள் ஆணையம் தெரிவித்துள்ளது.
பாகிஸ்தானியர்கள் உள்நாட்டில் மட்டும் பிச்சையெடுக்கவில்லை. வெளிநாடுகளுக்குச் சென்றும் பிச்சை எடுக்கும் தொழிலை மேற்கொண்டு வருகின்றனர். வெளிநாடுகளில் பிச்சையெடுக்கும் மக்களில் 90 சதவீதத்தினர் பாகிஸ்தானைச் சேர்ந்தவர்கள் என்பதும் தெரிய வந்துள்ளது. ஈராக், சவுதி உள்ளிட்ட நாடுகள் இது குறித்துப் பல முறை பாகிஸ்தான் அரசிடம் முறையிட்டுள்ளன. மேலும், அப்படி பிச்சை எடுப்பவர்களைப் பாகிஸ்தானுக்கே திருப்பி அனுப்பியும் வருகின்றன.
ஒருபுறம் பாகிஸ்தான் அரசு நிதி கேட்டு ஒவ்வொரு நாட்டின் கதவுகளையும் தட்டிக்கொண்டுள்ளது. மறுபுறம் பாகிஸ்தான் நாட்டு மக்கள் வெளிநாடுகளுக்குச் சென்று பிச்சை எடுத்து வருகின்றனர். மன்னன் எவ்வழியோ, மக்கள் அவ்வழி.