தேசப் பிரிவினையின் போது இந்துக்கள் அடைந்த துன்பங்கள் கொஞ்சம் நஞ்சமல்ல. சுதந்திரத்துக்கு முந்தைய 15 நாட்களில் லட்சக்கணக்கான இந்துக்கள் அகதிகள் ஆனார்கள். ஆயிரக் கணக்கானோர் படுகொலை செய்யப் பட்டனர். அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
ஏற்கெனவே ,காங்கிரசில் இருந்த முஸ்லீம்கள் அனைவரும் முஸ்லீம் லீக்கில் சேர்ந்து இந்துக்களுக்கும், சீக்கியர்களுக்கும் எதிரான வன்முறையில் தீவிரமாக ஈடுபட்டுவந்தனர். சில இந்துக்களும், சீக்கியர்களுமே காங்கிரசில் மிச்சமிருந்தனர். அவர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்ட காந்தி, ஒரு ஆலோசனையை வழங்கினார்.
பாகிஸ்தானை விட்டு முஸ்லீம் அல்லாதோர் வெளியேறக் கூடாது என்றும், பஞ்சாபிகள் பயப்படுவது நல்லதல்ல என்றும், தைரியமாக மரணத்தை எதிர்கொள்ளுங்கள். பயந்தால் கொல்லப் படுவதற்கு முன்பே மரணமடைந்து விடுவீர்கள் என்றும் காந்தி பேசினார். சிறிது நேரம் கடந்த பிறகுதான் காந்தியின் வார்த்தைகள் அங்கிருந்த இந்து மற்றும் சீக்கிய தொண்டர்களின் நெஞ்சில் ஈட்டி பாய்ந்தது போல் குத்தியது.
மூவர்ணக் கொடியில் ராட்டைக்குப் பதில் அசோக சக்கரம் வைக்கப்படுவதாகச் செய்தி காந்தியின் காதுகளுக்கு வந்தது. அதற்கு எதிராக ஒரு அறிக்கையைத் தயார் செய்யுமாறு மகாதேவ தேசாயிடம் கூறிய காந்தி, ராட்டை இல்லாத தேசியக் கொடியை வணங்க மாட்டேன் என்றும், தேசியக் கொடி எப்படி இருக்கவேண்டும் என்று முதன் முதலில் கற்பனை செய்தவன் தாம் என்றும், ராட்டை இல்லாத தேசியக் கொடியை தம்மால் ஏற்றுக் கொள்ள முடியாது என்றும் கூறினார்.
அதே நேரம், சிந்து மாகாணத்தில் உள்ள ஹைதராபாத் நகருக்கு ஸ்ரீ குருஜி பயணம் மேற்கொண்டார். சிந்து பகுதியில் இருக்கும் இந்துக்களையும் சீக்கியர்களையும் பாதுகாப்பாக எப்படி பாரதத்துக்கு அனுப்பி வைப்பது என்பது பற்றி ஆலோசனையில் ஈடுபட்டார். பிறகு நடந்த பொதுக் கூட்டத்தில், பிரிவினையை ஏற்றுக்கொண்டது பெரிய தவறு என்று கூறிய ஸ்ரீகுருஜி, இன்று இல்லாவிட்டாலும் நாளை அகண்ட பாரதத்தை மீண்டும் அமைப்போம் என்று நம்பிக்கை தெரிவித்தார்.
ஸ்ரீ குருஜி, இந்துக்களை எப்படிப் பாதுகாப்பாகப் பாரதத்துக்கு அனுப்பி வைப்பது என்று சிந்தித்துச் செயல்பட்டுக் கொண்டிருந்த நிலையில், இந்துக்கள் பற்றி எந்த கவலையும் இன்றி அமிர்தசரஸ் அம்பாலா வழியாக பாட்னா வந்தடைந்தார் காந்தி.
ஏற்கெனவே, பிரிட்டிஷ் அரசரின் பிறந்த தினம், பிரிட்டிஷ் மகாராணியின் பிறந்த தினம், ஐ.நா., சபையின் கொடி தினம், இந்தியச் சுதந்திர தினம் உள்ளிட்ட சில தினங்களில், இந்திய மூவர்ணக் கொடியுடன் பிரிட்டிஷின் ஜாக் கொடியை ஏற்றவேண்டும் என்று மவுண்ட்பேட்டன் நேருவுக்குக் கடிதம் எழுதி இருந்தார்.
தாங்கள் குறிப்பிட்ட தினங்களில் ஆகஸ்ட் 15 ஆம் தேதி தவிரப் பிற நாட்களில் பிரிட்டிஷ் ஜாக் கொடியை ஏற்றுவதில் எந்த ஆட்சேபனையும் இல்லை என நேரு பதில் அனுப்பி இருந்தார். இதற்கிடையே இன்னும் சில நாட்களில் சட்ட அமைச்சர் ஆகப் போகிறார் என்ற உற்சாகத்தில் மும்பையில் உள்ள டாக்டர் அம்பேதகர் வீட்டில் ஏராளமான தொண்டர்கள் கூடி இருந்தனர்.
பிரிவினைக்குச் சாதகமாகவே காந்தி இருக்கிறார்.நாட்டில் வன்முறைகள் நடக்கின்றன. இனி இந்துக்களும் முஸ்லீம்களும் இந்நாட்டில் சேர்ந்து இருக்க முடியாது. முஸ்லீம்களுக்கான நாடு பாகிஸ்தான்- அதுபோல இந்துக்களுக்கான நாடு பாரதம் என்பது தான் சரியானது. இந்தியாவில் உள்ள முஸ்லீம்கள் அனைவரையும் பாகிஸ்தானுக்கு அனுப்பவேண்டும் என்ற தெளிவான சிந்தனையைக் கொண்டிருந்தார் டாக்டர் அம்பேத்கர். ஆனால், அவரின் திட்டத்தை நேருவும் காந்தியும் ஏற்க மறுத்து விட்டனர்.