உத்தரகாண்ட் நிலச்சரிவில் பலர் உயிரிழந்த நிலையில், பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், அதீத கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவால், குடியிருப்பு பகுதிகள் முழுமையாக மண்ணில் புதைந்த நிலையில் மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாக கூறியுள்ளார்.
இதுகுறித்து முதல்வர் புஷ்கர் சிங் தாமியிடம் கேட்டறிந்ததாகவும், துயரச் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக பிரார்த்திக்கிறேன் எனவும் பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.