கொடைக்கானல் அருகே அரசுப் பள்ளியில் பயின்ற மாணவர் நீட் தேர்வில் பெற்ற வெற்றியால் மருத்துவ படிப்பில் சேர்ந்துள்ளார்.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் பூம்பாறை கிராமத்தைச் சேர்ந்த விவசாயி இளையராஜா – லதா தம்பதியின் மகன் யாதேஷ், அதே பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் படித்தவர். 12ம் வகுப்பில் 525 மதிப்பெண்கள் பெற்ற யாதேஷ், மருத்துவராக வேண்டும் என்ற கனவோடு கடந்த ஆண்டு நீட் தேர்வு எழுதியிருந்தார்.
முதல் முயற்சியில் வெற்றி கிடைக்காத நிலையில், ஓராண்டுகால பயிற்சிக்கு பின்னர் மீண்டும் நீட் தேர்வு எழுதி 465 மதிப்பெண்கள் பெற்றார். கிருஷ்ணகிரியில் மருத்துவம் படிக்க உள்ள நிலையில், தனது படிப்பு முடிந்த நிலையில், தனது கிராமத்திலேயே மருத்துவராக பணியாற்ற விரும்புவதாக யாதேஷ் தெரிவித்துள்ளார்.