தமிழகத்தில் வரையாடுகளின் எண்ணிக்கை கடந்த ஆண்டைவிட 21 சதவிகிதம் அதிகரித்துள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
சென்னை கிண்டி சிறுவர் பூங்காவில், நீலகிரி வரையாடு 2-வது ஒருங்கிணைந்த கணக்கெடுப்பு அறிக்கையை அமைச்சர் ராஜகண்ணப்பன் வெளியிட்டார்.
அதில்,நீலகிரி, கோவை, தேனி, திருப்பூர், திண்டுக்கல் மாவட்டங்களில் 14 வனக்கோட்டங்களில் 177 வரையாடு வாழ்விடப்பகுதிகளில் கணக்கெடுப்பு நடந்ததாகவும், ஏப்ரல் 24 முதல் 27ம் தேதி வரை 4 நாட்கள் நடந்தப்பட்ட கணக்கெடுப்பில் ஆயிரத்து 303 வரையாடுகள் இருப்பதும் அறிக்கை மூலம் தெரியவந்துள்ளது.