ஓமலூர் அருகே மதுபோதையில் ஆரம்ப சுகாதார நிலையத்தை இளைஞர்கள் சூறையாடிய வீடியோ இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டம், காடையாம்பட்டி அருகே உள்ள ஒண்டிவீரணூர் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு மதுபோதையில் வந்த இளைஞர்கள், செவிலியர்களிடம் ரகளையில் ஈடுபட்டுள்ளனர். இதனை அந்த பகுதி இளைஞர்கள் தட்டிக்கேட்டதால் இருதரப்பினருக்கு தகராறு ஏற்பட்டுள்ளது.
ஆரம்ப சுகாதார நிலையத்தில் இருந்த மருத்துவ உபகரணங்களை தேசப்படுத்திய மதுபோதை இளைஞர்கள், செல்போன் மூலம் அடியாட்களை வரவழைத்துள்ளனர். இதனை தொடர்ந்து, ஒண்டிவீரனூர் பகுதியைச் சேர்ந்த இளைஞர்களை விரட்டி சென்று தாக்கியுள்ளனர். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
இந்த சம்பவத்தில் போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், அரசு மருத்துவமனையில் உள்ள பொருட்களை சேதப்படுத்தி மதுபோதை இளைஞர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்தனர்.