நெல்லையில் காதல் தகராறு சாதி மோதலாக மாறிய சம்பவத்தில் 5 சிறார்கள் கூர்நோக்கு இல்லத்தில் அடைக்கப்பட்ட சம்பவம் சமூக ஆர்வலர்கள் இடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.
நெல்லை மாவட்டம், சேரன்மகாதேவி அருகே உள்ள கூனியூரைச் சேர்ந்த 15 வயது மாணவன், அதே பகுதியில் வேறு சமூகத்தைச் சேர்ந்த மாணவியை காதலித்து வந்துள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக இருதரப்பினருக்கு இடையே தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
காதல் விவகாரத்தை மையமாக வைத்து அந்த மாணவனை சாதிய ரீதியாக ஐந்து சிறார்கள் கொண்ட கும்பல் கடுமையாகத் தாக்கியுள்ளது.
இதில், காயமடைந்த மாணவன் தரப்பில் அளிக்கப்பட்ட புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், தாக்குதலில் ஈடுபட்ட 5 சிறார்களை கைது செய்தனர். பின்னர் 5 சிறார்களும் நெல்லையில் உள்ள சிறுவர்கள் கூர்நோக்கு இல்லத்தில் ஒப்படைக்கப்பட்டனர்.