குஜராத் மாநிலம் வதோதராவில் பாலம் இடிந்து விபத்துக்குள்ளானதில் அந்தரத்தில் தொங்கிக் கொண்டிருந்த டேங்கர் லாரி 28 நாட்களுக்குப் பிறகு மீட்கப்பட்டுள்ளது.
குஜராத் மாநிலத்தின் ஆனந்த் மற்றும் வதோதரா மாவட்டங்களை இணைக்கும் காம்பிரா – முக்பூர் பாலம் கடந்த மாதம் 9ம் தேதி அதிகாலை இடிந்து விபத்துக்குள்ளானது.
இதில் பாலத்தில் சென்ற பல வாகனங்களில் ஆற்றில் விழுந்தன. இந்த விபத்தில் 20 பேர் உயிரிழந்த நிலையில், பாலத்தின் உடைந்த பகுதியில் சிக்கிய டேங்கர் லாரியை மீட்பதில் கடும் சிரமம் ஏற்பட்டது.
இந்த நிலையில் 28 நாட்களுக்குப் பிறகு அந்தரத்தில் தொங்கிக் கொண்டிருந்த லாரி மீட்கப்பட்டுள்ளது.