மும்பையில் மின்சார ரயில்கள் மற்றும் மெட்ரோ ரயில்களில் கூலி படத்தின் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ள வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
நடிகர் ரஜினிகாந்த் மற்றும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகி இருக்கும் திரைப்படம் கூலி. இந்தப் படத்தில் அமீர் கான், சத்யராஜ், நாகர்ஜுனா, சௌபின் ஷாஹிர், ஸ்ருதிஹாசன் மற்றும் உபேந்திரா ஆகியோர் நடித்துள்ளனர்.
வரும் 14-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில், படத்தின் ப்ரோமோஷன் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.