புதுக்கோட்டை அருகே திருவேங்கை வாசலில் உள்ள வியாக்கபுரீஸ்வரர் கோயிலில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் 4 நாட்களாக இருளில் மூழ்கியுள்ளது.
அண்மையில் பெய்த மழையால் கோயிலில் உள்ள பழமையான மரம் சாய்ந்ததில், பக்கவாட்டு சுவர் இடிந்து விழுந்தது. மின் இணைப்பும் துண்டிக்கப்பட்டது.
இதுதொடர்பாக புகார் அளித்தும், இந்து சமய அறநிலையத்துறையும், மின்துறை அதிகாரிகளும் அலட்சியமாக இருப்பதாகப் பக்தர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
கடந்த 4 நாட்களாகக் கோயில் இருளில் மூழ்கியிருப்பதால் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய முடியாமல் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
எனவே மரத்தை அகற்றி, கோயிலுக்குத் தடையில்லா மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்குமாறு பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.