சுற்றுலாத் துறையை மேம்படுத்தும் விதமாகவும் இருநாடுகளுக்கு இடையேயான நட்பைப் பிரதிபலிக்கும் விதமாகவும், பிலிப்பைன்ஸ் செல்ல இந்தியச் சுற்றுலாப் பயணிகளுக்கு விசா தேவையில்லை என அந்நாடு அறிவித்துள்ளது.
பிலிப்பைன்ஸ் அதிபர் ஃபெர்னாண்ட் மார்கோஸ், 5 நாட்கள் அரசுமுறை பயணமாக இந்தியா வந்துள்ளார்.
டெல்லியில் பிரதமர் மோடியைச் சந்தித்த அவர், இரு தரப்பு உறவை மேம்படுத்துவது குறித்து ஆலோசனை மேற்கொண்டனர். இதையடுத்து இரு நாடுகளுக்கு இடையே, 9 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின
இந்த நிலையில், அதிபர் ஃபெர்னாண்ட் மார்கோஸ்-ன் இந்தியப் பயணத்தைத் தொடர்ந்து இந்தியச் சுற்றுலாப் பயணிகள் பிலிப்பைன்ஸ் செல்ல விசா தேவையில்லை என அந்நாடு அறிவித்துள்ளது.
சுற்றுலாத் துறையை மேம்படுத்தும் விதமாக இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த முடிவை வரவேற்கும் விதமாக, பிலிப்பைன்ஸில் இருந்து வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு இலவச மின்-விசா வசதியை விரிவுபடுத்த இந்தியா முடிவு செய்துள்ளது.