சிதம்பரம் அருகே டாஸ்மாக் கடையில் அரசு ஊழியர் அல்லாத வெளிநபர் மது பாட்டிலுக்குக் கூடுதலாக பத்து ரூபாய் வசூல் செய்யும் வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
கடலூர் மாவட்டம் சிதம்பரம் ரயில்வே ரோடு பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையில் மேற்பார்வையாளராக செந்தில்குமார் என்பவர் பணியாற்றி வருகிறார்.
அதேபோல், விற்பனையாளராக சுரேஷ், செந்தில் ஆகியோர் பணியாற்றி வரும் நிலையில், பணியாளர் அல்லாத வெளிநபர் ஒருவரும் அங்குக் கூடுதலாக பணியாற்றி வந்துள்ளார்.
இந்நிலையில், டாஸ்மாக் கடையில் மதுபானம் வாங்கிய நபரிடம் மது பாட்டிலுக்குக் கூடுதலாக அவர் 10 ரூபாய் எடுத்துள்ளார். எதற்காக பத்து ரூபாய் கூடுதலாக எடுத்துள்ளீர்கள் எனக் கேட்டபோது அனைத்து கடைகளிலும் இப்படித்தான் நடப்பதாக உதாசீனமாகப் பதிலளித்துள்ளார்.
10 ரூபாய்க்கான பில் வழங்குமாறு அந்த நபர் கேட்டபோது கொடுக்க முடியாது என்றும் அலட்சியமாகப் பதிலளித்துள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.