இந்தியாவில் உள்ள அனைத்து விமான நிலையங்களிலும் அதிகபட்ச பாதுகாப்பை பலப்படுத்துமாறு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
செப்டம்பர் 22 முதல் அக்டோபர் 2ஆம் தேதி வரை தீவிரவாதிகள் அல்லது சமூக விரோதக் குழுக்களால் விமான நிலையங்களில் தாக்குதல் நடத்தப்படலாம் என மத்திய புலனாய்வு துறை எச்சரித்துள்ளது. இதன் காரணமாக அனைத்து விமான நிலையங்களிலும் அதிகபட்ச பாதுகாப்பை பலப்படுத்துமாறு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
அதன்படி, விமான நிலையங்கள், விமான ஓடுபாதைகள், ஹெலிபேட்கள், விமான பயிற்சி மையங்கள் என அனைத்து விமான தளங்களிலும் 24 மணி நேரமும் பாதுகாப்பு அதிகரிக்கப்படும் என சிவில் விமான போக்குவரத்து அமைச்சகத்தின் பாதுகாப்பு பிரிவு தெரிவித்துள்ளது.
மேலும் விமான ஊழியர்கள், ஒப்பந்த நிறுவன ஊழியர்கள் மற்றும் பார்வையாளர்களின் அடையாளச் சான்றுகள் கட்டாயமாக சரிபார்க்கப்பட வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. விமான நிலைய வளாகம் முழுவதையும் சிசிடிவி கேமராக்கள் மூலம் தொடர்ச்சியாக கண்காணிக்க வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.