நெல்லையில் ஐடி ஊழியர் கவின் ஆணவப் படுகொலை வழக்கு தொடர்பாக பாளையங்கோட்டை காவல் நிலைய போலீசார் சிபிசிஐடி அலுவலகத்தில் நேரில் ஆஜராகி விளக்கமளித்தனர்.
நெல்லையில் ஐடி ஊழியர் கவின் ஆணவப் படுகொலை சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்த வழக்கினை சிபிசிஐடி போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்நிலையில் கொலை சம்பவம் நடைபெற்றபோது அங்கு சென்ற சிறப்பு உதவி ஆய்வாளர் முருகன், காவலர் வெயிலு ஆச்சி ஆகியோர் சிபிசிஐடி அலுவலகத்தில் ஆஜராகினர். தொடர்ந்து அவர்கள் வழக்கு தொடர்பாக சிபிசிஐடி அதிகாரிகளிடம் விளக்கம் அளித்தனர்.