நெல்லையில் பட்டியலின இளைஞர் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்திள்ளது.
நெல்லை மாவட்டம் ராதாபுரம் அருகே சங்கநேரி பகுதியை சேர்ந்த பிரபு என்ற 27 வயது பட்டியலின இளைஞர் அப்பகுதியில் தச்சு தொழில் செய்து வந்தார்.
அவரது செல்ஃபோன் எண்ணிற்கு வந்த அழைப்பில் மர்ம நபர் ஒருவர் தச்சு வேலைக்கு வருமாறு அழைத்துள்ளார். இதையடுத்து அந்த நபர் சொன்ன பகுதிக்கு பிரபு தனது நண்பர் தமிழ் என்பவருடன் இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார்.
இருவரும் கோழியங்குளம் அருகே சென்று கொண்டிருந்தபோது இருசக்கர வாகனத்தை வழிமறித்த மர்ம நபர்கள் தமிழை சரமாரியாக தாக்கினர். நிலைகுலைந்து மயங்கி கீழே விழுந்த தமிழை தொடர்ந்து பின்னால் அமர்ந்திருந்த பிரபுவை மர்ம நபர்கள் சரமாரியாக அரிவாளால் வெட்டியும் கழுத்தை அறுத்தும் கொலை செய்தனர்.
படுகாயம் அடைந்த தமிழ் நாகர்கோவிலில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.