ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி வரும் 31ம் தேதி சீனா செல்ல உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
சீனாவின் தியான்ஜின் நகரில் ஆகஸ்ட் 31 மற்றும் செப்டம்பர் 1ஆம் தேதி ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு நடைபெற உள்ளது.
இதில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி சீனா செல்ல உள்ளார். 2020இல் நடந்த கல்வான் பள்ளத்தாக்கில் இந்தியா – சீன ராணுவ வீரர்கள் இடையே மோதல் ஏற்பட்டதால் இரு நாடுகளுக்கும் இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டது.
2019இல் சீனா சென்ற பிரதமர், கல்வான் மோதலுக்கு பின் சீனாவுக்கு செல்லாமல் இருந்தார். இந்நிலையில் 6 ஆண்டுகளுக்கு பிறகு பிரதமர் மோடி சீனா செல்ல உள்ளார். வரும் 30ஆம் தேதி ஜப்பான் செல்லும் பிரதமர் மோடி அங்கிருந்து சீனா செல்ல உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.