ஜப்பானின் ஹிரோஷிமா நகா் மீது அமெரிக்கா அணுகுண்டு தாக்குதல் நடத்தியதன் 80-ஆவது ஆண்டு நினைவு தினம் கடைப்பிடிக்கப்பட்டது.
1945-ம் ஆண்டு இதே மாதத்தில் ஹிரோஷிமா மீது அமெரிக்கா நடத்திய அணுகுண்டுத் தாக்குதலில் லட்சக்கணக்கானோர்உயிரிழந்தனா். மூன்று நாள்களுக்குப் பின் நாகசாகி நகரில் நடத்தப்பட்ட மற்றோரு அணுகுண்டுவீச்சில் சுமாா் 70 ஆயிரம் போ் உயிரிழந்தனா்.
பின்னா் ஆகஸ்ட் 15-ல் ஜப்பான் சரணடைந்து, இரண்டாம் உலகப்போா் முடிவுக்கு வந்தது. இந்த நிலையில், 80-ஆவது ஆண்டு நினைவு தினத்தை ஒட்டி நினைவிடத்தில் பிரதமா் ஷிகெரு இஷிபா உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.