விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே அரசு தொடக்க பள்ளியின் கழிவறை அமைந்துள்ள இடத்தில், பழங்குடியின பெண்ணுக்கு அதிகாரிகள் பட்டா போட்டு கொடுத்த அவலம் அரங்கேறியுள்ளது.
மேல்மலையனூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட மேல்மன்னூர் கிராமத்தில் அரசு தொடக்க பள்ளி செயல்பட்டு வருகிறது.
இந்த நிலையில், இலவச வீட்டு மனை பட்டா கேட்டு விண்ணப்பித்து இருந்த
அதே கிராமத்தை சேர்ந்த பெண்ணுக்கு, பள்ளியின் கழிவறை அமைந்துள்ள இடத்தை அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்யாமல் பட்டா வழங்கியதாக கூறப்படுகிறது.
அந்த பெண்ணும் வேறு வழியின்றி வீடு கட்டுவதற்கு பூமி பூஜை செய்துள்ளார். அதிகாரிகளின் அலட்சியத்தால் மாணவர்கள் பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.