லண்டனில் நடைபெற்ற கிரிக்கெட் போட்டியின்போது நரி ஒன்று மைதானத்திற்குள் புகுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
லண்டனில் உள்ள புகழ்பெற்ற லார்ட்ஸ் மைதானத்தில், ஓவல் இன்வின்சிபில்ஸ் மற்றும் லண்டன் ஸ்பிரிட் அணிகளுக்கு இடையேயான போட்டி நடைபெற்றது.
ஆட்டம் விறுவிறுப்பாகச் சென்றுகொண்டிருந்த நிலையில், யாரும் எதிர்பாராத விதமாக மைதானத்திற்குள் நரி ஒன்று மின்னல் வேகத்தில் ஓடியது.
நரி மைதானத்திற்குள் சுதந்திரமாக வலம் வந்ததால், ஆட்டம் உடனடியாக நிறுத்தப்பட்டது. மைதானத்திலிருந்த ரசிகர்கள் இச்சம்பவத்தைக் கைதட்டி ஆரவாரத்துடன் ரசித்தனர். இந்த காட்சிகள் இணையத்தில் வைரலாகி உள்ளது.