கள்ளர் சமூகத்தினருக்கான பள்ளி விடுதிகளைப் பெயர் மாற்றியதற்கு எதிர்ப்பு தெரிவித்து மதுரை மாவட்டம் செக்கானூரணியில் சீர்மரபினர் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தமிழகத்தில் உள்ள கள்ளர் சமூக மாணவர்களின் விடுதிகளை சமூக நீதி விடுதி எனத் தமிழக அரசு அண்மையில் பெயர் மாற்றம் செய்தது. அந்த வகையில் மதுரையில் உள்ள விடுதிகளும் பெயர் மாற்றம் செய்யப்பட்டது.
இதற்குத் தொடக்கம் முதலே எதிர்ப்பு தெரிவித்த சீர்மரபினர் நல சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். செக்கானூரணி பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தின்போது திமுக அரசைக் கண்டித்து முழக்கங்கள் எழுப்பப்பட்டது.