சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் தொடரில் இருந்து விலகுவதாக ஜோகோவிச் அறிவித்துள்ளார்.
கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் நியூயார்க்கில் வருகிற 24-ந் தேதி தொடங்குகிறது.
இதற்கு முன்னோட்டமாக சின்சினாட்டி ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி அமெரிக்காவில் நாளை முதல் 18-ந் தேதி வரை நடக்கிறது. இந்நிலையில் சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் தொடரில் இருந்து ஜோகோவிச் விலகியுள்ளார்.