தூத்துக்குடியில் உள்ள பக்கிள் ஓடையைச் சுத்தப்படுத்த வேண்டும் என அரசுக்குப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சுமார் 6 கிலோ மீட்டர் தூரம் உடைய இந்த கால்வாயில் அசுத்தக் கழிவுகள் கலப்பதோடு முறையாகத் தூர்வாராத நிலையில் காணப்படுகிறது.
இதனால் ஓடை அருகில் வசிக்கும் மக்கள் நோய் தொற்றுக்கு ஆளாவதாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
பொதுமக்களின் தொடர் புகாரையடுத்து இந்த ஓடை விரைவில் சுத்தப்படுத்தப்படும் என மாநகராட்சி மேயர் தெரிவித்துள்ளார்.