அம்பத்தூரில் தூய்மை பணியாளரைத் தாக்கியவர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை வியாசர்பாடியைச் சேர்ந்த ஆதிலட்சுமி அம்பத்தூர் நகராட்சியில் தூய்மை பணியாளராக பணிபுரிந்து வருகிறார்.
இவரது செல்போன் பழுதாகி இருந்ததால் தூய்மை பணியாளர்கள் போராட்டம் குறித்து தகவல் தெரியாமல் இருந்துள்ளார்.
வழக்கம் போல் தனக்கு ஒதுக்கப்பட்ட பகுதியில் தூய்மை பணியில் ஈடுபட்டிருந்த ஆதிலட்சுமியை சுமார் 10க்கும் மேற்பட்ட பெண்கள் சரமாரியாகத் தாக்கியதோடு, நாங்கள் எல்லாம் ரிப்பன் பில்டிங்கில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகிறோம், நீ மட்டும் ஏன் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறாய் எனக் கேள்வி எழுப்பினர்.
இது குறித்து ஆதி லட்சுமி அம்பத்தூர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.