கோவையில் ரேஷன் அரிசியைக் கள்ளச் சந்தையில் விற்பனை செய்த ஊழியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
ஆவாரம் பாளையத்தில் உள்ள ரேஷன் கடை ஒன்றில் கள்ளச்சந்தையில் அரிசி விற்பனை நடைபெறுவதாக வீடியோ ஆதாரம் வெளியானது.
அதன் அடிப்படையில் அங்கு ஆய்வு மேற்கொண்ட மாவட்ட கூட்டுறவுச் சங்க அலுவலர்கள் குற்றத்தை உறுதிப்படுத்தினர்.
அரிசியைச் சட்டவிரோதமாக விற்ற பணியாளர் சாந்தா மணியை மாவட்ட கூட்டுறவு இணைப் பதிவாளர் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.