சீனாவின் குவாங்டாங் மாகாணத்தில் கனமழை காரணமாக பல்வேறு பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கி உள்ளன.
தெற்கு சீனாவின் குவாங்டாங் மாகாணத்தில் கடந்த சில நாட்களாகக் கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. இதனால் 16 ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
கனமழை காரணமாக 3 விரைவுச் சாலைகள், 6 தேசிய சாலைகள், 25 கிராம சாலைகள் மூடப்பட்டுள்ளன. சேதமடைந்த சாலைகளைச் சீரமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. வெள்ளத்தில் சிக்கித் தவித்தவர்களை மீட்புப் படையினர் ரப்பர் படகுகள் மூலம் மீட்டு வருகின்றனர்.