வங்கதேசத்தில் அடுத்தாண்டு பிப்ரவரியில் பொதுத்தேர்தல் நடைபெறும் என முகம்மது யூனுஸ் அறிவித்துள்ளார்.
வங்கதேசத்தில் கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் மாணவர் போராட்டம் வெடித்ததால் பிரதமர் பதவியில் இருந்து ஷேக் ஹசீனா விலகி இந்தியாவில் தஞ்சமடைந்தார்.
இதையடுத்து அந்நாட்டு நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு ராணுவத்தின் கண்காணிப்பில் முகமது யூனுஸ் இடைக்கால தலைவராக அறிவிக்கப்பட்டார். இந்நிலையில் வங்கதேசத்தில் அடுத்தாண்டு பிப்ரவரி மாதம் பொதுத்தேர்தல் நடைபெறும் என முகம்மது யூனுஸ் அறிவித்துள்ளார்.