மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமாரை, மரணம் ஏற்படும் என்று தெரிந்தே தாக்கியதாக, திருத்தி அமைக்கப்பட்ட முதல் தகவல் அறிக்கையில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
சிவகங்கை மாவட்டம் மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமார் லாக்கப் மரண வழக்கின் திருத்தி அமைக்கப்பட்ட முதல் தகவல் அறிக்கை வெளியாகியுள்ளது.
அதில் ஏற்கனவே பதிவுசெய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கையில் உள்ள புகார்தாரரான தனிப்படை காவலர் கண்ணன் என்பவருக்குப் பதிலாக, அஜித்குமாரின் சகோதரர் நவின், புகார்தாரராக சேர்க்கப்பட்டுள்ளார்.
அதேபோல் தனிப்படை காவலர் கண்ணனை வழக்கில் சேர்த்தும், கொலையில் தொடர்பில்லாத தனிப்படை வாகன ஓட்டுநர் ராமச்சந்திரனை வழக்கில் இருந்து நீக்கியும் திருத்தி அமைக்கப்பட்ட முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது.
அஜித்குமாரை தனிப்படை காவலர்கள் தன்னிச்சையாக தங்கள் பொறுப்பில் வைத்திருந்ததுடன், குற்றத்தை ஒப்புக்கொள்ள மறுத்து அலைக்கழிப்பு செய்வதாக எண்ணி கோபத்தில் மூர்க்கத்தனமாகத் தாக்கியதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் உண்மையை வர வைக்க வேண்டும் என்ற நோக்கில் மரணம் ஏற்படும் என்று தெரிந்தே 5 தனிப்படை காவலர்களும் சேர்ந்து அஜித்குமாரை தாக்கியதும் முதல் தகவல் அறிக்கையில் தெரியவந்துள்ளது.