அனைத்து துறைகளிலும் வாய்ப்புள்ளதாகவும், மாணவர்கள் அதனை பயன்படுத்தி கொள்வதில்லை என்றும், இந்திய கிரிக்கெட் அணி வீரர் நடராஜன் வேதனை தெரிவித்துள்ளார்.
விழுப்புரத்தில் உள்ள தனியார் பள்ளியில் நடைபெற்ற விளையாட்டு போட்டி நிகழ்ச்சியில் நடராஜன் கலந்து கொண்டு, வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கினார். பின்னர் நிகழ்ச்சியில் பேசிய அவர், எந்த துறையை தேர்ந்தெடுத்தாலும், கடினமாக உழைத்தால் வெற்றி கிடைக்கும் எனத் தெரிவித்தார்.
அனைத்து துறைகளிலும் வாய்ப்புள்ளதாக கூறி நடராஜன், அதனை மாணவர்கள் பயன்படுத்தி கொள்வதில்லை என்றும், தொலைக்காட்சி மற்றும் செல்போன் முன்பாக நேரத்தை வீணடிப்பதாகவும் கவலை தெரிவித்தார்.