பெரம்பலூர் அருகே பிரதமர் வீடு கட்டும் திட்டத்தில் முறைகேடு செய்தததாக ஊராட்சி செயலர், திமுகவை சேர்ந்த முன்னாள் ஊராட்சி மன்ற தலைவி உள்ளிட்ட 5 பேர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.
பெரம்பலூர் மாவட்டம் பில்லாங்குளம் ஊராட்சியில் 2020-2023-ம் ஆண்டு காலக்கட்டத்தில் பிரதமர் வீடு கட்டும் திட்டத்தில் முறைகேடு நடைபெற்றதாக மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து, ஊராட்சி செயலர் ஜெயராமன், திமுகவை சேர்ந்த முன்னாள் ஊராட்சி மன்றத்தலைவி தமிழ்செல்வி, அவரது கணவர் செந்தில்வேலன் உள்ளிட்ட 5 பேர் முறைகேட்டில் ஈடுபட்டது கண்டறியப்பட்டது.
இதனையடுத்து, அவர்கள் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறது.