சென்னையில் தொடங்கி நடைபெற்று வரும் கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ் தொடர் போட்டியின் முதல் சுற்றில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த வீரர் வீராங்கனைகள் பங்கேற்றனர்.
சென்னை தேனாம்பேட்டையில் உள்ள நட்சத்திர விடுதி ஒன்றில் சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ் – 2025 என்ற போட்டி தொடங்கி நடைபெற்று வருகிறது.
இதன் முதல் சுற்றில் சென்னையைச் சேர்ந்த கிராண்ட்மாஸ்டர்களான பிரணவ், கார்த்திகேயன் முரளி ஆகியோர் மோதினர்.
இந்த ஆட்டம் 44-வது நகர்த்தலின் போது டிராவில் முடிவடைந்தது. இந்திய கிராண்ட் மாஸ்டரான அர்ஜுன் எரிகைசி, அமெரிக்க கிராண்ட் மாஸ்டரான அவோண்டர் லியாங்கை தோற்கடித்தார்.
இதேபோல சேலஞ்சர்ஸ் பிரிவில் நடத்தப்பட்ட போட்டியின் முதல் சுற்றில் இந்திய கிராண்ட் மாஸ்டரான பிரனேஷ் வெற்றி பெற்ற நிலையில், இந்தியாவின் முன்னணி வீராங்கனை துரோணவல்லி தோல்வியைத் தழுவினார்.