தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் 70 அடிக்குப் பிரமாண்ட விநாயகர் சிலை தயாரிக்கும் பணி நடைபெற்று வருகிறது.
ஹைதராபாத்தின் முக்கிய பகுதியான கைரதாபாத்தில் ஆண்டுதோறும் பிரமாண்ட சிலை வைத்து விநாயகர் சதுர்த்தி விமரிசையாகக் கொண்டாடப்படுவது வழக்கம்.
அந்தவகையில் 71வது ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழாவை ஒட்டி உலக அமைதியை வலியுறுத்தி விஷ்வ சாந்தி என்ற பெயரில் 70 அடி உயரப் பிரமாண்ட சிலை தயாரிக்கப்பட்டு வருகிறது.
சுமார் 200க்கும் மேற்பட்டோர் இந்த பிரமாண்ட சிலையைத் தயாரிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.